நான்கு புத்த மடத்து துறவிகள் இரண்டு வாரத்திற்கு எதுவும் பேசாமல் மௌனமாக தியானம் செய்வது என முடிவெடுத்தனர். அன்று இரவு படபடவென அடித்த காற்றில் ஏற்றி வைத்திருந்த மெழுகுவத்தி மினுமினுக்கென நிலையற்று எரிந்து முடிவில் அனைந்து விட்டது.
முதல் துறவி: "ஆ!! மெழுகுவத்தி அனைந்து விட்டது"
இரண்டாம் துறவி மெதுவாக: "பேசக் கூடாது என்று அல்லவா, நாம் முடிவெடுத்து இருந்தோம்?"
மூன்றாம் துறவி கோபமாக: "நீங்கள் இருவரும் ஏன் மௌனத்தை கலைத்து விட்டிர்கள்?"
நான்காம் துறவி சிரித்தவாறே: "ஹா ஹா! நான் ஒருவன் தான் பேச வில்லை"
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
திங்கள், 19 ஏப்ரல், 2010
உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?
சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான்.
ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
கதை - 1 உணர்த்தியது
நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..
ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
கதை - 1 உணர்த்தியது
நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..
காதலித்துப்பார்....
ஒரு நொடியில் கண்ணீர்
வரவைக்குமா???
ஒரு நொடியில் இருதயம்
நின்று துடிக்குமா???
ஒரு நொடியில் எல்லாம்
இழந்தது போல் தோன்றுமா???
ஒரு நொடியில் மரணித்த
உணர்வு ஏற்படுமா???
ஒரு நொடியில் உலகம்
தலைகீழானதை உணரமுடியுமா???
காதலித்துப்பார்
இதெல்லாம் நடக்கும்....
--------------------
உனக்கு வலிக்கும்போதெல்லாம் பிறருக்கு
![]() |
| MAHA JAIDEEP |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


