திங்கள், 26 ஏப்ரல், 2010

எது நிலையில்லாது போகும்?

பொய்யானது எதும் நிலையில்லாது போகும்.

ABODE

     A castle after all is but a house-the dullest one
when lacking company

முன்னால் வந்திருந்தால்..

கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து வந்திருந்து ஒன்றாக கூடியிருந்த துறவியர்களுக்குள் தீடிரென விவாதம் ஒன்று அங்கிருந்த பூனையைப் பற்றி ஆரம்பித்தது. அவர்களுடைய விவாதத்திற்கு எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலையை அடைந்த போது சா'ன் ஆசிரியர் நான்சூ'வான் அங்கிருந்த பூனையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டு "நீங்கள் உங்கள் விவாதத்திற்கு ஒழுங்காக முற்றுப் புள்ளி வைத்தால் இந்தப் பூனையின் உயிர் தப்பித்தது, இல்லையேல் பிணம் தான்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

வந்திருந்த துறவிகள் ஒருவரும் பதில் கூறாமல் அமைதி காத்தனர். கொஞ்ச நேரம் காத்திருந்த நான்சூ'வான் யாரும் பதில் கூறாததால் கையில் வைத்திருந்த அரிவாளால் பூனையை இரண்டாக வெட்டினார்.

அந்த சமயத்தில் யாத்திரைக்காக சென்றிருந்த ஆசிரியர் சாவோ சாவ் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் நான்சூ'வான் என்ன நடந்தது என்பதனை விளக்கினார். அதனைக் கேட்ட சாவோ சாவ் எந்த பதிலும் கூறாமல் தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து தலையில் தொப்பி மாதிரி வைத்து பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

"நீங்கள் மட்டும் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்திருந்தால், இந்தப் பூனையை காப்பாற்றி இருக்கலாம்" என்று நான்சூ'வான் போகின்ற சாவோ சாவிடம் அவர் காதில் விழுமாறு கூறினார்.

ஓஷோவின் கருத்து:

"இப்படி செய்தால் நல்லது, அப்படி செய்தால் கெட்டது" என்று சமுதாயம் சிலக் கோட்பாடுகளை வரையறுத்துள்ளது. அப்படிப் பட்ட கோட்பாடுளின் வாழ்பவர்களையே சமுதாயம் மதிக்கும். அதனை மதிக்காதவர்களை சமுதாயம் காலில் போட்டு மிதிக்கும். அதணால் தனி மனிதனுக்கு சுதந்திரம் இல்லை. உதாரணங்கள் கொடுக்காமல் சொல்லிக் கொண்டே சென்றால் சொல்லுபவர்க்கும் புரியாது, கேட்பவர்க்கும் புரியாது. ஒரு குழந்தை பிறந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது வலது கை பழக்கம் உடைய அனைத்து பெற்றோர்களும் தனது சிறு குழந்தையை சில காரியங்களை வலது கையினால் தான் செய்ய வேண்டும் என்றும், சிலவற்றை இடது கையினால் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். பல குழந்தைகள் அதைப் பின்பற்றியே ஆக வேண்டிய கட்டாயம். வெகு சில குழந்தைகள் இடது கையில் மாற்றி செய்யும் போது "ஒரட்டுக் கையன்" என்ற பெயரினை எடுக்க வேண்டி இருக்கிறது. சில குழந்தைகள் கை சப்பிக் கொண்டே இருக்கும். பெற்றோர்களுக்கு பிடிக்குமா என்ன?. இவை எல்லாம் சிலக் கோட்பாடுகள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சமுதாயம் தனிமனிதனிடம் தினித்து அவனை தன்னுடைய வழிக்கு கொண்டு வருகிறது. உண்மையான சுய சிந்தனையையும், சுதந்திரத்தையும் இளைய வயதிலேயே தன்னையும் அறியாமல் இழக்க நேரிடுகிறது. இந்தக் கோட்பாடுகள் நன்மை தருவனவாகவும் இருக்கலாம், தீமை பயப்பனவாகவும் இருக்கலாம்.

இப்பொழுது கதைக்கு செல்வோம், ஸென்னின் முக்கியத் துவமே இருநிலையான மனதினை ஒரு முகப் படுத்துவதாகும். எதனைப் பிரித்து ஆராய்ந்து பார்க்காமல் இருப்பதாகும். இயற்கை மலை நல்லது, கடல் கெட்டது, ஆமை உயர்ந்தது, யானை தாழ்ந்தது என்று எந்த விதமான பாகுபாடும் பார்ப்பதில்லை. எல்லாம் ஒன்றுதான். உண்மையான துறவிகளும் அதைப் போன்றே எதையும் சமமாக பார்க்கும் கண்ணோட்டத்தினைப் பெற வேண்டும். இந்த துறவிகள் ஒரு பூனைக்காக பெரிய விவாதம் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ளே இருக்கின்ற மாயை இன்னும் அழிய வில்லை. ஒரு உயிரினைக் கொல்லுவது தவறு என்றாலும் நான்சூ'வான் பூனை என்று ஒன்று இருப்பதனால் தானே நீங்கள் விவாதம் செய்கிறிர்கள் அது இல்லை என்றால் எதனை வைத்து விவாதம் செய்வீர்கள் என்று அதனை ஒரே வெட்டில் இரு துண்டுகளாக்குகிறார்.

ஸென்னில் இது போன்ற கதைகள் ஏராளம். இங்கு ஏன் இவர் பூனையைக் கொன்றார் என்று எண்ணாமல், எதற்காக என்று பார்த்தால் அவர் செய்தது சரி என்று தோன்றும். யார் ஒருவர் துறவியாக முடியும் முற்றும் துறந்தவரே. அதற்கு அமைதியான மனமும் விவாதமில்லாத எண்ணமும் வேண்டும், அதற்காக பூனையை வெட்டி அவர்களுடைய எண்ணங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.

சாவோ சாவ் நான்சூ'வான் கூறியதைக் கேட்டு எந்த விவாதமும் செய்யாமல் தான் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதனை செருப்பை தலையில் வைத்துக் காட்டுகிறார். எல்லாரும் காலில் அணிவதை தன் தலையில் அணிந்து சுதந்திரம் இல்லாத சமுதாயத்தில் தான் மனதினை ஒரு நிலைப் படுத்தி சுதந்திரம் பெற்றவன் என்று காட்டுகிறார். அதனைப் புரிந்து கொண்ட நான்சூ'வான் கொஞ்சம் முன்பே வந்திருந்தால் ஒரு பூனையின் உயிர் தப்பித்து இருக்குமே என்று கூறுகிறார்).

மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?


பழிவாங்கும் மனபான்மையுடன்,கவலையுடன், சலிப்புடன் மக்கள் வாழ்கிறார்கள்.