வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நீ உன் கண்களால் காண்பதெல்லாம் உனக்காகவே...


நான் இந்த உலகத்தின் சிறிய வருகை...
நான் எப்போதும் தனிமையை விரும்பும்...மனிதன்.
யோகி எனுல் இருக்கும் முகமுடி அணியாத மனிதன்.
அவனை இந்த உலகிற்கு எடுத்து சொல்லுவது தான் என் வேலை.!
என் குருவின் வேலையை நான் தொடருவேன்..அவருடைய கனவை நாங்கள் எடுத்து செல்வோம்...

நான் என் சிந்தனையை, கற்பனையை, கனவுகளை, காதலை இந்த காகிதத்தில் புதைகிறேன்..
என்னை உணருங்கள், பருகுங்கள்..
இப்படிக்கு
ஜெய்தீப்

ஓஷோ கடைசியாக பேசிய வார்த்தை...


“நான் எனது கனவை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் “
ஆனால் அவர்..
பிறக்கவுமில்லை ,இறக்கவுமில்லை,
இந்தப் பூமி எனும் கிரகத்தைப்
பார்வையிடவே தோன்றினார் .
டிசம்பர் 11-1931 ஜனவரி 19-1990

காமத்தை அடக்குவதாலோ திரைமறைவில் லீலைகள் புரிவதாலோ உலகிற்கு பிரம்மச்சாரியாக நடிக்கலாம் அதனால் என்ன பயன் ?
இன்று தேவை “உள்முகப் புரட்சி ”சொன்னவர் ஓஷோ.

ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகமே எப்போதும் சந்தோஷமே.... பெருமையுடன் வழங்குவது உங்கள் ஜெய்தீப்.

ஜோர்புத்தா..


நான் ஜோர்பா புத்தாவை பற்றிப் பேசுகிறேன் . அதாவது நான் உலகத்தைப் பற்றியும் தியானதன்மை நிறைந்த மனிதனைப் பற்றியும் பேசுகிறேன். ஓர் உண்மையான புத்தா ஆன்மிக வளர்ச்சியினை விரும்புகிறார் . ஆனால் வறுமை ,ஏழ்மை இவைதான் ஆன்மிகம் என்று ஒரு புத்தர் கருதுவது இல்லை .அவர் வாழ்வில் செல்வ செழிப்பிற்கும் வளமைக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை .உனக்கு இரண்டு உலகங்களும் கிடைத்தால் ,ஏன் இரண்டையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.? எதற்க்காக தேர்த்து எடுக்க வேண்டும் ?நான் வசதியாக வாழ்ந்து இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எதையும் செய்தது இல்லை .ஆனால் அது என்னுடைய தியானத் தன்மைக்கு இடையுறாக இருக்கவில்லை ,எனவே எனது சொந்த அனுபவத்தின் ஆதாரத் தோடு உனக்கு கூறுகிறேன். நீ வசதியாக வாழ்ந்துக் கொண்டு தியான தன்மையோடு இருக்க முடியும் .