திங்கள், 12 ஏப்ரல், 2010

108 ஆம்புலன்ஸ் திருப்தியா? அதிருப்தியா?


11-04-1020 அன்று மதியம் சுமார் 11:30மணிக்கு நானும் மற்றும் என் நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிவிட்டு வரும் போது ஒருவன் மிகவும் குடித்துவிட்டு TVS XL வண்டியில் வேகமாக வந்தான்.
மெல்லமாக போடா என்றோம்..ஆனால் அவன் காதில் வாங்கவேயில்லை. குறுகே ஒரு வண்டி வேகமாக வந்தது அதை எப்படியோ சமாளித்தான் ஆனாலும் BALANCE கொடுக்க முடியவில்லை கிழே விழுந்துவிட்டன். கிழே விழுந்தவுடன் மூச்சி பேச்சி
இல்லை.தண்ணீர் கொடுத்தோம் மெல்ல மூச்சிமட்டும் வந்தது. உடனே 108க்கு போன் செய்தோம்.
அவர்கள் எந்த ஏரியா?
எந்த மாவட்டம் ?
எந்த தாலுக்கா?
உன்னுடைய போன் நம்பர் சொல்லு?
LAND MARK என்ன?
எல்லாத்துக்கும் பதில் சொல்லியும் அரமணி நேரம் கடந்தும் யாரும் வரவேயில்லை.
உடனே நாங்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். ஆனாலும் ஒரு PROBLEM அவனிடம் பணம் மற்றும் சில உடைமைகள் இருந்தன..அதனால் யோசித்தோம்.பிறகு அடிபட்டவனுக்கு தெரிந்தவர் ஒருவர் வரவே,அவரிடம் எல்லாத்தையும் கொடுத்துவிட்டு ஷேர் ஆட்டோவில் அடிபட்டவனை எடுத்து சென்றோம்.கடைசிவரைக்கும் 108 AMBULANCE வரவேயில்லை.
108 AMBULANCE அறிமுகம் செய்தவர்கள் இது அருமையான திட்டம் என்கிறார்கள்.
பொதுமக்களோ ,இறந்தபிறகு எதற்கு AMBULANCE என்கிறார்கள்.
ஏது எப்படியோ பணம் செல்லுதினால் தான் கோயில் பெரசாதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக